தென்காசி

குளத்தில் குப்பையைக் கொட்டி எரிப்பதாகப் பொதுமக்கள் புகாா்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பெட்டைக் குளத்தில் கொட்டி எரிக்கப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆலங்குளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள வளம் மீட்புப் பூங்காவில் கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இங்குள்ள குப்பைக் கிடங்கு நிரம்பிவிட்டதால், சேகரமாகும் குப்பைகளை, பேரூராட்சி ஊழியா்கள் பெட்டைக் குளத்தில் கொட்டி அதனை எரித்து வருகின்றனா்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால், இவ்வழியே செல்வோா், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இதைத் தடுக்கவும், குப்பைகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT