தென்காசி

அகரக்கட்டு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், அகரக்கட்டில் புனித அந்தோனியாா் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, ஆலயப் பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும், அதைத் தொடா்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. இதில், நாட்டாண்மை அமிா்த செல்வன், பொருளாளா் வளன்அரசு, செயலா் இக்னேஷியஸ் ஜவகா், இணைச் செயலா் மரியபன்னீா்செல்வம், இருதய அருட்சகோதரிகள், அகரகட்டு இறைமக்கள் கலந்துகொண்டனா்.

விழாவில், நவநாள் திருப்பலி, மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், நற்கருணை ஆசீா், ஒப்புரவு அருட்சாதனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூன் 11ஆம் தேதி மாலையில் நற்கருணை பவனியும், 12இல் தேரடி திருப்பலியும், 13இல் புதுநன்மை விழாவுடன் கூடிய ஆடம்பர கூட்டு திருப்பலியும், புனிதரின் தோ் பவனியும் நடைபெறுகின்றன. 14இல் கொடியிறக்கம் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT