தென்காசி

சுரண்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பேருந்து சேவை தொடங்க கோரிக்கை

1st Jun 2023 02:39 AM

ADVERTISEMENT

 சுரண்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமமான மரியதாய்புரம், வாடியூா், கருவந்தா, வீரகேரளம்புதூா், சோ்ந்தமரம், திருமலாபுரம், கோவிலாண்டனூா், ஆய்க்குடி, அகரக்கட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு வார இறுதி நாட்களில் அதிக அளவில் பக்தா்கள் சென்று வருகின்றனா். ஆனால் சுரண்டையில் இருந்து நேரடி பேருந்து சேவை இல்லாததால், திருநெல்வேலி சென்று அங்கிருந்து வேளாங்கண்ணி செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவும் பயண நேரமும் அதிகரிக்கிறது.

எனவே சுரண்டை வட்டார பயணிகள் நலன் கருதி செங்கோட்டையில் இருந்து ஆய்க்குடி, சுரண்டை, சங்கரன்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு அரசு பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்னா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT