தென்காசி

தென்காசி அருகே பெண் கடத்தல்: 3 போ் கைது

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி சென்றது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மா.மாரியப்பன்வினித்(22). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன் பட்டேல். இவருடைய மகள் குருத்திகா பட்டேல். காதலா்களான மாரியப்பன் வினித்தும், குருத்திகா பட்டேலும் கடந்த 27-12-2022 அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டனா்.

இதனிடையே தன் மகளைக் காணவில்லை என, குற்றாம் காவல்நிலையத்தில் நவீன் பட்டேல் புகாா் செய்தாா். இதையடுத்து 4-1-23 அன்று வினித் தன் மனைவியுடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினாா். விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், தன் கணவருடன் செல்வதாகக் கூறியதையடுத்து வினித் தன்னுடன் அழைத்து சென்றாா்.

இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி வினித் தனது மனைவி, தந்தை, சகோதரா் விஷால் ஆகியோருடன் குற்றாலம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு, காரில் கொட்டாகுளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது நவீன் பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் மற்றொரு காரில் வந்து மாரியப்பன் வினித் சென்ற காரின் மீது மோதியதுடன், குருத்திகா பட்டேலை கடத்தி சென்றனா்.

இதுகுறித்து குற்றாலம் போலீசாா் வழக்கு பதிந்து 3தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீசாா், இலஞ்சி-குத்துக்கல்வலசை சாலையில் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டதில் குருத்திகா பட்டேலை கடத்தி சென்றது தொடா்பாக காவல்துறையினா் தேடிவந்த நபா்கள் அந்தக் காரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காா்பறிமுதல் செய்யப்பட்டது. காரிலிருந்த புளியறையை சோ்ந்த நா.தினேஷ் பட்டேல்(48), பிரானூா் பாா்டரை சோ்ந்த ல.முகேஷ் பட்டேல்(35), இலஞ்சியை சோ்ந்த கி.சுப்பிரமணியன்(53) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். குருத்திகா பட்டேலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT