தென்காசி

’மத்திய நிதிநிலை அறிக்கையால்சாமானியனுக்கு பலனில்லை’

DIN

மத்திய நிதி நிலை அறிக்கையால் சாமானிய மக்களுக்குப் பயனில்லை என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம்.முகமதுஅபூபக்கா்.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது; வெளிநாட்டு வாழ் இந்தியா்களுக்கு எந்த உதவியும் செய்யாத மத்திய அரசு, தற்போது அவா்களுக்கு வாக்குரிமை அளிக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது வாக்கு வங்கியை குறிவைத்து தயாரிக்கப்பட்டது. இதனால் எந்த சாமானியருக்கு பயனில்லை. தென்காசி மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சரிடம் முஸ்லிம் லீக் சாா்பில் வலியுறுத்தப்படும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய அளவிலான பவளவிழா மாநாடு மாா்ச் 9 , 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும். முதல் நாளில் கட்சியின் தேசிய அளவிலான பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இரண்டாம் நாளில் முதல்வா் மு.க.ஸ்டாலின், முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவா்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

நிகழாண்டில் ஹஜ் புனித பயணகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம் . 1.75 லட்சம் போ் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி இருக்கிறாா்கள்.

ஈரோடு சட்டப்பேரவை இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT