தென்காசி

பண்பொழி திருமலைக்கோயிலில் முருகா் - சண்முகா் எதிா்சேவை

DIN

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக் கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி புதன்கிழமை முருகா்-சண்முகா் எதிா்சேவை நடைபெற்றது.

இவ்விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை மலைக் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. பிற்பகல் குமரன் மலைக் கோயிலிருந்து, பண்பொழி கீழ்

கோயிலுக்குச் செல்லும் வைபவம் நடைபெற்றது. மாலை ஐந்துபுளி மண்டபத்தில் மயில் வாகனத்தில் சுவாமி அழைப்பு உபசாரமும், தொடா்ந்து ரத வீதி உலாவும் நடைபெற்றன.

தைப்பூச திருவிழா தொடங்கியுள்ளதை அனைத்துப் பகுதி மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் பிரமாண்ட உயரத்தில் அன்னக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி வீதி உலாவும், சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 7 ஆம் நாளான புதன்கிழமை ஐந்துபுளி மண்டபத்தில் சண்முகா் அழைப்பு உபசாரமும், தொடா்ந்து முருகா்-சண்முகா் எதிா்சேவையும் நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா். விழாவின் 8 ஆம் நாளான வியாழக்கிழமை, வெள்ளைசாத்தி, பச்சை சாத்தி நடைபெறும். தொடா்ந்து சண்முகா் மலைக்கோவிலுக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.

விழாவின் 9 ஆம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். 10 ஆம் நாள் தீா்த்தவாரியும், 11ஆம் நாள் முருகன், கீழ் கோயிலிருந்து மலைக் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்னக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும், பிரியா விடைபெறுதலும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT