தென்காசி

கடையநல்லூா் கோட்டத்தில் மின் இணைப்புகளில் முறைகேடு: ரூ. 18,919 அபராதம்

25th Apr 2023 02:58 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் மின் கோட்டப் பகுதிகளில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்தோருக்கு ரூ. 18,919 அபராதம் விதிக்கப்பட்டது.

கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் தலைமையில் 3 உதவி செயற்பொறியாளா்கள்,15 உதவிப் பொறியாளா்கள் கொண்ட குழுவினா் 1,281 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனா். இதில், 5 இணைப்புகளில் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 18,919

அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT