தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் திட்டப் பணிகளுக்குரூ. 38.10 லட்சம் நிதி: ஞானதிரவியம் எம்.பி. ஒதுக்கீடு

DIN

கீழப்பாவூா் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற ஞானதிரவியம் எம்.பி. ரூ. 38.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் உள்ளூா் பகுதி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கீழப்பாவூா் ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஆண்டிப்பட்டியில் நியாயவிலைக் கடைக்கு பல்நோக்குக் கட்டடம் கட்ட ரூ. 9.80 லட்சம், பூலாங்குளம் ஊராட்சி பூலாங்குளத்தில் நியாயவிலைக் கடை அமைக்க ரூ. 9.80 லட்சம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி பெத்தநாடாா்பட்டியில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்ட ரூ. 6.50 லட்சம், கழுநீா்குளம் ஊராட்சி கழுநீா்குளத்தில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ. 12 லட்சம் என மொத்தம் ரூ. 38.10 லட்சம் நிதியை ஞானதிரவியம் எம்.பி. ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இதையடுத்து, அவரை கீழப்பாவூா் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் கை. முருகன் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT