தென்காசி

சதுரங்கப் போட்டி: ஆலங்குளம் அரசு பள்ளி மாணவா்கள் சாதனை

12th Sep 2022 12:37 AM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தென்காசி மாவட்ட அளவில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் தென்காசியில் நடைபெற்றன. குயின்ஸ் சதுரங்க அகாதெமி சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 150க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். ஆறு சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில், ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவா் சகில் பிரபாகரன், 7 ஆம் வகுப்பு மாணவி எமினா ஆகியோா் முதல் இடமும் 11ஆம் வகுப்பு மாணவி முகில் வதனி 5 ஆம் இடமும் 9 ஆம் வகுப்பு மாணவா் முகம்மது பைசல் 9 ஆம் இடமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை தலைமை ஆசிரியா், உடற்கல்வி ஆசிரியா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT