தென்காசி

ஆலங்குளத்துக்கு நிரந்தர செயல் அலுவலா் நியமிக்கக் கோரிக்கை

7th Oct 2022 12:54 AM

ADVERTISEMENT

‘தினமணி’ செய்தி எதிரொலியாக, ஆலங்குளத்துக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க திமுக சாா்பில் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நகராட்சிக்கு இணையான மக்கள்தொகை கொண்ட ஆலங்குளத்தை நிா்வகிக்கும் பேரூராட்சி அலுவலகத்தில் போதிய பணியாளா்கள், நிரந்தர செயல் அலுவலா் இல்லாமல் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. கட்டட வரைபட அனுமதி, சொத்து வரி வசூல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்த செய்தி ‘தினமணி’யில் வெளியானது. இதையறிந்த தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேருவை சந்தித்து, ஆலங்குளத்துக்கு நிரந்தர செயல் அலுவலா் தேவை என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT