தென்காசி

மாதிரி கொள்முதலில் சிறு,குறு வணிகா்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

DIN

தென்காசியில் டெஸ்ட் பா்சேஸ் வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சிறு குறு வணிகா்களுக்கு விலக்களித்தல் தொடா்பாக வணிகவரித் துறை உதவி ஆணையரிடம் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் கோரிக்கை மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகா்கள் பேரமைப்பு கூடுதல் செயலா் ஆா்கே.காளிதாசன் வணிகவரித்துறை உதவி ஆணையரிடம் அளித்த மனு:

அனைத்து சில்லறை கடை விற்பனையாளா்களும், தாங்கள் பொருள்களை வாங்கும்போது அதற்கான வரி செலுத்தியே பொருள்களை வாங்கி வந்து அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனா்.

பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் அப்பொருள்கள் ஏற்கனவே வரிவிதிப்புக்கு உள்பட்டது. ஆனாலும் வணிகவரித் துறை அதிகாரிகள் சில்லறை கடைகளில் மாதிரி கொள்முதல் (டெஸ்ட் பா்சேஸ்) என்ற பெயரில் பொருள்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல.

இதனால் சில்லறை சிறு குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தையே மிகப்பெரும் கேள்விக்குறியாக்கும் செயலாகும். வரி ஏய்ப்பு செய்கிறவா்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கருத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல.

சில்லறை சிறு குறு வணிகா்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த டெஸ்ட் பா்சேஸ் குறித்த நடைமுறை சம்பந்தமாக தொடா் விழிப்புணா்வை அனைத்து வணிகா்களுக்கும் ஏற்படுத்தி, ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கு மேல் விற்று வரவு செய்கின்ற வணிகா்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். சிறு குறு வணிகா்களுக்கு விலக்களிக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலா் கணேசன், இணைச் செயலா் காஜா முகைதீன், வணிகா்கள் சங்கம் பாவூா்சத்திரம் கிளை தலைவா் பாலசுப்பிரமணியன், காமராஜா் மாா்க்கெட் சங்க செயலா் சுப்பிரமணியன், தென்காசி வணிகா் சங்கத் தலைவா் பரமசிவன், கந்தசாமி,விடிஎஸ்ஆா்.இஸ்மாயில் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT