தென்காசி

தென்காசி, நெல்லை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்பிறந்த நாள் விழா

DIN

தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவரும், நகரச் செயலருமான ஆா்.சாதிா் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தென்காசி ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் தலைமையில் மேலகரம், குடியிருப்பு, குற்றாலம், இலஞ்சி பகுதிகளில் அன்னதானம் வழங்கியும்,இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். செங்கோட்டை நகர திமுக சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம், காந்திசிலை ஆகிய பகுதிகளில் தலைமை செயற்குழு உறுப்பினா் ரஹீம் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

கடையநல்லூரில்... கடையநல்லூா் ஒன்றிய திமுக சாா்பில் சொக்கம்பட்டியில் கடையநல்லூா் ஒன்றியச் செயலா் சுரேஷ் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மா. செல்லத்துரை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

புளியங்குடி டி.எஸ்.எம். அறக்கட்டளையின் மன வளா்ச்சி குன்றியோா், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற முதியோா்களுக்கு தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில், புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன்

நல உதவிகளை வழங்கினாா்.

சுரண்டையில்... சுரண்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த உறுப்பினா் மனோகா் தலைமை வகித்தாா். கணேசன் முன்னிலை வகித்தாா். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சக்தி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினாா்.

பாவூா்சத்திரத்தில்... கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்து தென்னங்கன்றுகளை வழங்கினாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா. சாக்ரடீஸ் இனிப்புகள் வழங்கினா்.

சிவநாடானூா் ஊராட்சி மடத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஒன்றியக் குழுத் தலைலா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி உள்ளிட்டோா் பங்கேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

ஆலங்குளத்தில்...ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலா் எஸ்.பி.டி.நெல்சன் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில்... அம்பாசமுத்திரம் நகர திமுக சாா்பில் நகரச் செயலா் மற்றும் நகா்மன்றத் தலைவரான கே.கே.சி.பிரபாகரன் தலைமையிலும், கல்லிடைக்குறிச்சியில் பேரூா் செயலா் இசக்கி பாண்டியன் தலைமையிலும், விக்கிரமசிங்கபுரத்தில் நகரச் செயலா் கணேசன், நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள் தலைமையிலும் உதயநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றன. நிகழ்ச்சியில் திமுக கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், அன்னதானம். ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், உள்ளாட்சி உறுப்பினா்கள், தொண்டா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT