தென்காசி

அரியப்பபுரத்தில் இன்றும், நாளையும்சிறப்பு ஆதாா் சேவை முகாம்

25th May 2022 12:38 AM

ADVERTISEMENT

 

கீழப்பாவூா் ஒன்றியம் அரியப்பபுரத்தில் சிறப்பு ஆதாா் சேவை முகாம் புதன், வியாழன் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.

அரியப்பபுரம் ஊராட்சி மன்றம், இந்திய அஞ்சல் துறை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. அரியப்பபுரம் ஊராட்சி அலுவலகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் புதிய ஆதாா் அட்டை எடுத்தல், திருத்தங்கள் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஊராட்சித் தலைவா் தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT