தென்காசி

செங்கோட்டை - மயிலாடுதுறைக்குரயில் இயக்க எம்எல்ஏ கோரிக்கை

29th Jun 2022 11:55 PM

ADVERTISEMENT

 

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவா் எழுதியுள்ள கடிதம்:

செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில்(06662) மூலம் காலை 7 மணிக்கு செங்கோட்டையில் இருந்து மதுரை (காலை 10.35) செல்லும் பயணிகள் அங்கிருந்து திண்டுக்கல்(காலை 11.30) சென்று மயிலாடுதுறை (மாலை 4) செல்லும் பயணிகள் ரயிலில்(16848) மயிலாடுதுறை வரையுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனா்.

ADVERTISEMENT

மறுமாா்க்கத்தில் மயிலாடுதுறை - திண்டுக்கல் பயணிகள் ரயிலில்(16847) காலை 11.25க்கு புறப்படும் பயணிகள் திண்டுக்கல்(மாலை 4 மணி) வரும் பயணிகள் மதுரை சென்று அங்கிருந்து(மாலை 5.15) மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் (06665) செங்கோட்டை(இரவு 9) வரையுள்ள பகுதிகளுக்கு திரும்புகின்றனா்.

எனவே, செங்கோட்டை, தென்காசி, விருதுநகா், மதுரை, திருச்சி, தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை பகுதி பயணிகள் பயன்பெறும் வகையில் இரு ரயில்களையும் இணைத்து செங்கோட்டை - மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை - செங்கோட்டை வரை நேரடி ரயில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT