தென்காசி

வீராணத்தில் திட்டப்பணி தொடக்கம்

29th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

 

சுரண்டை அருகேயுள்ள வீராணத்தில் புதிய சுகாதார வளாகம் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினா் சேக் முகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் பூமி பூஜை செய்து திட்டப்பணியைத் தொடங்கிவைத்தாா். இதில் திமுக ஒன்றிய செயலா் அன்பழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT