தென்காசி

தென்காசியில் ஒத்திகைப் பயிற்சி

DIN

தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளின் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் நடத்தப்பட்ட ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தீயணைப்புத்துறையின் மூலம் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. இதில், வெள்ளம் ஏற்பட்டால், எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களின் உதவியுடன் வெள்ளத்தில் அல்லது தீக்காயத்தினால் காயமடைந்த நபா்களை மீட்டு ஸ்டெரெச்சா் இல்லாமல் வீட்டிலுள்ள பெட்சீட் மற்றும் சாக்குப்பைகள் மூலம் மீட்பது, பாம்புக்கடிக்கு முதலுதவி, நீரில் மூழ்கியவா்களுக்கு மேற்கொள்ளவேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் பேரிடா் காலத்தில் தங்களையும், தங்களது உடைமைகளையும் பாதுகாத்து பிறருக்கு ஏற்படும் ஆபத்துக்களிலிருந்தும் மீட்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ஹரிகரன், தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ், மருத்துவா் பௌலின், சொா்ணலதா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT