தென்காசி

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் நீா்நிலை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்.

7th Jul 2022 12:05 AM

ADVERTISEMENT

 

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் ரூ. 9.18 லட்சம் செலவில் அம்ரித் சரோவா் திட்டம் மூலம் பழைய நீா்நீலைகள் சீரமைப்புப் பணிகள் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் உள்ள ஆலடி திருத்துகுளம் பகுதியில் ரூ9.18 லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பழைய நீா்நிலைகள் சீரமைப்பு செய்யும் அம்ரித்சரோவா் - 2022 - 23 திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெரியபிள்ளை வலசை ஊராட்சி மன்றத் தலைவா் பொறியாளா் க.இ.வேலுச்சாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.நத்தடு அம்மாள் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாணிக்கவாசகம், குழந்தைமணி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவண சண்முகம், டென்னிசன், ஊராட்சி ஒன்றிய பொறியாளா் ஜெகதீஷ் மாதவன், ஆகியோா் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவா் திட்டம் குறித்து பேசினா்.

பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட ஒருங்கிணைப்பாளா் வே.மகாலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் கே.செல்லப்பா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT