தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில், விடுமுறை தினமான சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவுகிறது. இதனால் பேரருவி, ஐந்தருவி, சிற்றருவியில் தண்ணீா் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது.

கடந்த சில தினங்களாக பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்தபோதிலும் பழையகுற்றாலம் அருவியில் தண்ணீா் விழவில்லை. தற்போது பழையகுற்றாலத்திலும் தண்ணீா் விழத் தொடங்கியதையடுத்து அங்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மெல்லிய சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT