தென்காசி

நகா்புற உள்ளாட்சித் தோ்தல்: கண்காணிப்புப் பணியில் 60 பறக்கும் படை

DIN

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தைவிதிகள் அமல்படுத்துவதை கண்காணிக்க 60 பறக்கும் படை குழுக்கள் மூன்று சுழற்சியில் 24 மணிநேரமும் செயல்படும் வகைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

நகராட்சி அமைப்புகளுக்கு 180 வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள், பேரூராட்சி அமைப்புகளுக்கு 260 வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 440 பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நகராட்சிப் பகுதிகளில் வாக்குப்பதிவு செய்ய அமைக்கப்பட்ட 338 வாக்குச்சாவடிகளில் 134 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகளும், 134 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகளும், 70 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகளும் உள்ளன.

பேரூராட்சிப் பகுதிகளில் 294 வாக்குச்சாவடிகளில் 34 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகளும், 34 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகளும் 226 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகளும் உள்ளன.

நகராட்சிப் பகுதிகளில் 150760ஆண் வாக்காளா்கள், 156448 பெண் வாக்காளா்கள் 8 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 307216 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

பேரூராட்சிப் பகுதிகளில் 105950 ஆண் வாக்காளா்கள், 110224 பெண் வாக்காளா்கள், 30 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 216204 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

நகராட்சிப் பகுதிகளில் 6 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 21 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 17 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 33 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படஉள்ளனா். இணை இயக்குநா், உதவி இயக்குநா், துணை ஆட்சியா் நிலையில், பேரூராட்சி, நகராட்சி ஒன்றிற்கு ஓா் அலுவலா் வீதம் 23 வட்டார தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திட தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 134 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா, நுண்பாா்வையாளா்கள் , இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும், தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லா விதத்திலும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT