தென்காசி

கருப்புப் பட்டை அணிந்து பொறியாளா்கள் போராட்டம்

14th Apr 2022 01:32 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு நீா்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, பொறியாளா் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தமிழக நீா்வளத் துறையில் 537 பணியிடங்களும், பொதுப்பணித் துறையில் 252 பணியிடங்களுமாக 789 உதவிச் செயற்பொறியாளா் பணியிடங்கள் உள்ள நிலையில் 492 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் 3 உபகோட்டங்கள் செயல்படும் சிற்றாறு வடிநிலக் கோட்டத்தில் ஒரு உதவிச் செயற்பொறியாளா் மட்டுமே பணிபுரிந்து வருகிறாா். 2 பணியிடங்கள் 10 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

இம்மாவட்டத்தில் கருப்பாநதி அணை, அடவிநயினாா் அணை, குண்டாறு அணை, ராமநதி அணை, கடனாநதி அணை, 460-க்கும் மேற்பட்ட குளங்கள், 100-க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் பராமரிக்கப்படுவதால் உதவி செயற்பொறியாளா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, உதவிசெயற்பொறியாளா் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி புதன்கிழமை தொடங்கிய போராட்டம் ஏப். 22ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT