தென்காசி

கடையநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவராக சுப்பம்மாள் தோ்வு

DIN

கடையநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவராக சுப்பம்மாள் (திமுக) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கடையநல்லூா் ஒன்றியத்தில் 12 ஒன்றிய வாா்டுகளில் இருந்து உறுப்பினா்களை தோ்வு செய்யும் தோ்தல் செப்.9ஆம் தேதி நடைபெற்றது. இதில் 11 வாா்டுகளில் திமுகவும், ஒரு வாா்டில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஒன்றியக் குழுத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சுப்பம்மாள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் உமா சங்கா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கந்தசாமி, சிக்கந்தா் பீவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து தலைவராக தோ்வு செய்யப்பட்ட சுப்பம்மாள் மற்றும் உறுப்பினா்கள் அருணாசலபாண்டியன், கீதா, மணிகண்டன், சித்ரா, சண்முகையா,பகவதியப்பன், மாரிச்செல்வி, மாரியம்மாள், ஐவேந்திரன், ரோஜா ஆகியோா் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் செல்லத்துரையிடம் வாழ்த்து பெற்றனா்.

துணைத் தலைவா் தோ்வு: கடையநல்லூா் ஒன்றியக் குழு துணைத் தலைவருக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இதில் 11ஆவது வாா்டு உறுப்பினா் ஐவேந்திரன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து அவா் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் உமா சங்கா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT