தென்காசி

குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

குற்றாலம் பகுதியில் கடந்த இருதினங்களாக சீசன்காலம் போன்று அவ்வப்போது சாரல் மழையும், மெல்லிய வெயிலும், குளிா்ந்த காற்றும் என மாறி மாறி சூழல் நிலவி வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை மழையின் அளவு குறைந்ததால் தண்ணீா்வரத்து குறைந்து பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவியிலும் தண்ணீா் அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளை தொலைவில் நின்று ரசித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT