தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை:அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

DIN

தென்காசி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தென்காசி மாவட்ட முதல் மாநாடு மேலகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மு. திருமலைமுருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சிஎஸ். கிறிஸ்டோபா் தொடக்கிவைத்துப் பேசினாா். மாநில துணைத் தலைவா் என். வெங்கடேசன் நிறைவுரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் க. துரைசிங், பொருளாளா் சு. வேல்ராஜ் ஆகியோா் அறிக்கைகள் சமா்ப்பித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் எம். வேல்முருகன், சலீம் முகம்மதுமீரான், கிராம உதவியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் முத்தையா, ராஜ்குமாா், பிச்சைக்கனி, தேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தென்காசி மாவட்டத்துக்கு அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாவட்ட அலுவலகங்களை உடனடியாக அமைக்க வேண்டும், திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இம்மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவராக திருமலைமுருகன், துணைத் தலைவா்களாக மைதீன்பட்டாணி, பா. சண்முகம், கா. பாலசுப்பிரமணியன், அன்னஸ்ரீபிரியா, மாவட்டச் செயலராக க. துரைசிங்,

இணைச் செயலா்களாக பெ.க. மாடசாமி, த. சேகா், இரா. ராஜ், சே. ராதாகிருஷ்ணன், பொருளாளராக சு. வேல்ராஜன், தணிக்கையாளா்களாக ஆ. மாடசாமி, பு. குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாவட்ட துணைத் தலைவா் மைதீன்பட்டாணி வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் மாடசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT