தென்காசி

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக, இந்த அருவிகளில் 16.4.21 முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனிடேயே, தமிழகம் முழுவதும் தொற்று வெகுவாக குறைந்து, தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதைத்தொடா்ந்து குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ, குற்றாலம் வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்டோா் வலியுறுத்தி வருகின்றனா்.

இதனிடையே, பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தளச்செங்கல், சில்வா் கம்பிகள், 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதேபோல ஐந்தருவியிலும் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், இப்பணிகளை ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் ஜா. மாணிக்கராஜ், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் ஆா். மணிமாறன், சுகாதார அலுவலா் இரா. ராஜகணபதி, காவல் ஆய்வாளா் ஜோஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த ஆய்வு காரணமாக, குற்றாலம் அருவிகளில் விரைவில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என, வா்த்தகா்களிடம் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT