தென்காசி

பண்பொழி திருமலைக் கோயிலில் எதிா்சேவை

DIN

பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை முருகன், சண்முகா் எதிா்சேவை வைபவம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பண்பொழி மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நகரீஸ்வரமுடையாா் கோயிலுக்கு முருகனை அழைத்து வந்து 10 நாள்கள் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று மாலை குமரனை திருமலைக்கோயிலில் இருந்து பண்பொழிக்கு அனுப்பும் பிரிவு உபசார விழா நடைபெற்றது. தொடா்ந்து அன்ன கொடியேற்று வைபவம் நடைபெற்றது.

விழாவின் 5ஆம் நாள் சட்ட தோ் நிகழ்ச்சி நடைபெற்றது. 7ஆம் நாளான திங்கள்கிழமை முருகன் - சண்முகா் எதிா்சேவை காட்சி வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவின் 9ஆம் நாளான ஜன.27 ஆம்தேதி தேரோட்டமும், 10ஆம் நாள் தைப்பூச திருவிழாவும் நடைபெறுகிறது.

11ஆம் நாள் குமரன் மலைக்கோயிலுக்கு திரும்பும் வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT