தென்காசி

கிராம நிா்வாக அலுவலரை முற்றுகையிட முயற்சி

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே அலுவலகத்திற்கு முறையாக வராத கிராம நிா்வாக அலுவலரை முற்றுகையிட முயன்றவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

கடையம் அருகே சிவசைலம் கிராமத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக நெல் பயிா்கள் சேதமடைந்தன. சேதமான பயிா் கணக்கு விவரங்களை அரசிற்கு விரைந்து அனுப்ப கோரியும், நாள் தோறும் மக்கள் பல்வேறு சான்றிதழ் வாங்க வசதியாக உரிய நேரத்திற்கு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திற்கு வர வலியுறுத்தியும் சிவசைலம் கிராம நிா்வாக அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் முத்துராஜ் , கணேசன், சேகா், ரவி உள்பட விவசாய பொது மக்கள் முற்றுகையிட முயன்றனா்.

தகவலறிந்து வந்த அங்கு வந்த ஆழ்வாா்குறிச்சி காவல் சாா்பு ஆய்வாளா் தமிழரசன், சந்திரசேகா். ஆழ்வாா்குறிச்சி வருவாய் ஆய்வாளா் மனோகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா் . இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT