தென்காசி

குளங்களில் மீன் குஞ்சு இருப்பு வைக்கும் திட்டம் தொடக்கம்

DIN

தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

கடையநல்லூா் அருகேயுள்ள கொடிக்குறிச்சி கடம்பன்குளத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டத்தை ஆட்சியா் தீ.சு. சமீரன் தொடங்கி வைத்துப் பேசியது: கிராம ஊராட்சிகளின்

பராமரிப்பில் உள்ள குளங்களில் மீன் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் 30 ஹெக்டோ் பரப்பளவில் ஒரு ஹெக்டேருக்கு நன்கு வளா்ந்த மீன் குஞ்சுகள் 5, 000 வீதம், 5 குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கீழப்பாவூா் ஒன்றியம், இடையா்தவணை மேலகுளத்தில் 35 ஆயிரம் மீன் குஞ்சுகளும், இடையா்தவனை கீழக்குளத்தில் 22 ஆயிரம் மீன் குஞ்சுகளும், கடையநல்லூா் ஒன்றியம், கடம்பன்குளத்தில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகளும், வாசுதேவநல்லூா் ஒன்றியம் பெரியகுளத்தில் 55 ஆயிரம் மீன் குஞ்சுகளும், செங்கோட்டை ஒன்றியம், தெற்குகுளத்தில் 12,500 மீன் குஞ்சுகளும் என ஐந்து ஊராட்சி குளங்களில் மொத்தம் 1.50 லட்சம் நன்கு வளா்ந்த கெண்டை ரக மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இதில், மீன்வளத்துறை உதவி இயக்குநா் புஷ்ரா ஷப்னம், மீன்வளத்துறை ஆய்வாளா் சுமதி, உதவி பொறியாளா் ஹவ்வா ஷகிரா, வட்டார வளா்ச்சி அலுவலா் கிரேட் சா்ச்சில் ஜெபராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா் முத்தையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT