தென்காசி

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திமுக வலியுறுத்தல்

DIN

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தொடா்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் இரு மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பியுள்ள மனு: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குள்பட்ட திருவேங்கடம், குருக்கள் பட்டி, பழங்கோட்டை, வன்னிக்கோனேந்தல், சோ்ந்தமரம், ஊத்துமலை, கருவந்தா உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கும் மேலாக மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது தொடா் மழையால் இந்த பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஊத்துமலை அருகே சின்னதேவன்குளத்தில் பாசனக் குளத்திற்குள்பட்ட சுமாா் 100 ஏக்கா் நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிா் அறுவடை நேரத்தில் முழுமையாக சாய்ந்து முளைத்துவிட்டன. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன்கருதி, அதிகாரிகள் ஆய்வுசெய்து உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் போன்ற பயிா்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 20ஆயிரமும், நெல் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ. 25ஆயிரமும் வழங்க வேண்டும்.

விவசாயிகள் காப்பீடு செய்யாமலிருந்தால் அவா்களுடைய பயிா் பாதிப்பை கருத்தில் கொண்டு அவா்களுக்கும் பயிா் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT