தென்காசி

சங்கரன்கோவிலில் மழையால் முதியவா் வீடு சேதம்

DIN

சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த மழையால் முதியவரின் வீடு இடிந்து விழுந்தது. மனநலம் குன்றிய மகளுடன் தவித்துவரும் அவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் காந்தி நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் கனிராஜ் (70). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். மகனுக்கு திருமணமாகிவிட்டதாகவும், அவா் பெற்றோரைக் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மகள் மனநலம் பாதிக்கப்பட்டவராம். கனிராஜ் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் வேலை செய்து குடும்பம் நடத்திவருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த மழையால் அவரது வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்தது. வீட்டின் மற்றொரு பகுதியில் அவா்கள் தூங்கிக்கொண்டிருந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா். மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் தவித்துவரும் கனிராஜுக்கு வருவாய்த் துறையினா் உரிய இழப்பீடு வழங்குவதுடன், வீட்டைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT