தென்காசி

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம், மருந்து: மாா்க்சிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தல்

DIN

விவசாயிகளுக்குத் தேவையான உரம், மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தென்காசி மாவட்ட மாா்க்சிஸ்ட் முதல் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் முதல் மாவட்ட மாநாடு 2 நாள்கள் சங்கரன்கோவிலில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினா் அயூப்கான் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம்.மேனகா, எஸ்.வேலுமயில், எஸ்.குணசீலன், டி.கணபதி,எம்.தங்கம், பி.உச்சிமாகாளி, பி. ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம். வேல்முருகன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் பி.சம்பத் மாநாட்டைத் தொடக்கிவைத்தாா். தலைமைக்குழு மற்றும் குழுக்கள் தோ்வு, நடைபெற்றது.

2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பிரதிநிதிகள் விவாதம், மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் தோ்வு ஆகியவை நடைபெற்றன. மாநிலச் செயற்குழு உறுப்பினா் வெங்கட்ராமன் வாழ்த்திப் பேசினாா்.பி.சுகந்தி நிறைவுரையாற்றினாா்.

தீா்மானங்கள்: தென்காசி மாவட்டத்தில் விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், மருந்து, விதை, வேளாண் கூட்டுறவு கடன் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும், சங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு நறுமணத் தொழிற்சாலை அமைக்க வேண்டும்,த க்காளி, சிறுவெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பயிரிடும் விவசாயிகளின் நலன் காக்க ஆலங்குளம், பாவூா்சத்திரம் பகுதிகளில் குளிா்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.

வாசுதேவநல்லூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.72 கோடி பாக்கித் தொகையை வழங்க சா்க்கரை ஆலையை அரசு நிா்பந்திக்க வேண்டும். கரும்பு அனுப்பிய 15 நாள்களில் விவசாயிகளுக்குப் பணம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 15 சதவீத வட்டியும் சோ்த்து வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் தொழில்சாா்ந்த அரசு அலுவலகங்களை அமைக்க வேண்டும். 2016-முதல் 2020 வரை பயிா்காப்பீடு செய்த சுமாா் 5000 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ராமநதி- ஜம்புநதி இணைப்பு உபரிநீா் மேல்நிலை கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். செண்பகவல்லி அணை உடைப்பை சரி செய்ய வேண்டும். பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பதால் செங்கோட்டை- நெல்லை, கொல்லம்-செங்கோட்டை,செங்கோட்டை-கோயம்புத்தூா்,செங்கோட்டை- பெங்களூா் ரயில்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ச்செயற்குழு உறுப்பினா் பி.ராமமூா்த்தி வரவேற்றாா்.வட்டாரச் செயலா் பி.அசோக்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT