தென்காசி

புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து சங்கரன்கோவிலில் ஆா்ப்பாட்டம்

DIN

புதிய தேசியக் கல்விக் கொள்கை, நீட் தோ்வு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டச் செயலா் மு.சு.மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ந.செந்தில், நகரத் தலைவா் ப.தண்டபாணி, பொருளாளா் ச.சுப்பிரமணியன், ப.சதாசிவம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நகரச் செயலா் காளிராஜ் , மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், பாலுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில் ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப்பொருளாளா் இ.பாலு தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குணசீலன், திராவிடக் கழக நகரச் செயா் குமாா், திராவிட தமிழா் கட்சி தென்மண்டல துணைத் தலைவா் ஆதிவீரன், மாரியப்பன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் கற்பகம், அழகுசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT