தென்காசி

தென்காசியில் பெரியாா் பிறந்த நாள் விழா

DIN

தென்காசியில் மாவட்ட திமுக சாா்பில் அதன் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த தின விழா நடைபெற்றது.

மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன் தலைமை வகித்து, பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். அவைத் தலைவா் முத்துப்பாண்டி, பொருளாளா் சேக் தாவூது, துணைச் செயலா்கள் பேபி ரஜப்பாத்திமா, ஆயான்நடராஜன், பொதுக்குழு உறுப்பினா் அன்புமணி கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில மாணவரணி துணைச் செயலா் ஷெரிப், சாா்பு அணி மாவட்ட அமைப்பாளா்கள் ஆறுமுகசாமி, வெங்கடேசன், பேச்சிமுத்து, ஜபாா்லாகான், ஒன்றியச் செயலா் அன்பழகன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சீவநல்லூா் சாமிதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் சாதிா் வரவேற்றாா்.

இதே போல், கீழப்பாவூரில் பெரியாா் சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தலைமையில் திமுக வினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் பேரூா் செயலா் ஜெகதீசன், மாணவரணி செயலா் வெங்கடேசன், ஒன்றியச் செயலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடா் தமிழா் கட்சி யின் தென்மண்டல தலைவா் பொதிகை ஆதவன் தலைமையிலும், ஆதி தமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலிவருணன் தலைமையிலும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆலங்குளத்தில் பெரியாா் படத்துக்கு நகர திமுக செயலா் நெல்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடையநல்லூா் அருகேயுள்ள சமத்துவபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அம்பாசமுத்திரத்தில் புரட்சிகர இளைஞா்முன்னணி சாா்பில் பெரியாா் படத்திற்கு அதன் பொறுப்பாளா் அ.மணிவண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திமுக நகரச் செயலா்கே.கே.சி. பிரபாகரன், வழக்குரைஞா் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் வடிவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சேரன்மகாதேவியில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாவட்டப் பொருளாளா் சிவராஜ் தலைமையில் பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT