தென்காசி

கொள்ளை வழக்குகளில் சிறப்பான பணி:காவல் துறையினருக்கு எஸ்பி பாராட்டு

DIN

தென்காசி, குற்றாலத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பான வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை பாராட்டி காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் சான்றிதழ்கள் வழங்கினாா்.

தென்காசியில் கடந்த செப். 7ஆம் தேதி பகலில் வீட்டு உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி 800 கிராம் தங்க நகை மற்றும் ரூ. 50 ஆயிரத்தை மா்மநபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான தனிப்படையினா் சிசிடிவி கேமரா, செல்லிடப்பேசி எண் டிரேக்கிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 33ஆவது நாளில் கொள்ளை கும்பலை கைது செய்து , ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 126 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

இதேபோல், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இம்மாதம் 21ஆம் தேதி வீட்டை விலைக்கு வாங்க வந்த நபரிடம் கத்தியைக்காட்டி ரூ. 45 லட்சத்தை பறித்துக்கொண்டு வாகனத்தில் தப்பினா்.

இவ்வழக்கில், குற்றாலம் காவல் ஆய்வாளா் சுரேஷ், உதவி ஆய்வாளா்கள் ராஜேஷ்,சொக்கம்பட்டி உதவி ஆய்வாளா் வேல் பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளா் வெள்ளைத்துரை, தனிப்பிரிவு காவலா் மருதுபாண்டியன், காவலா் ராதாகிருஷ்ணன், காா்த்தீசன் ஆகியோா் சிறப்பாக செயல்பட்டு மறுநாளே சிவகிரி சோதனை சாவடியில் கொள்ளையரை கைது செய்து ரூ. 45லட்சத்தை மீட்டனா்.

இரண்டு வழக்குகளிலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை பாராட்டி, காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் ான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் கடந்த 19 முதல் 25ஆம் தேதி வரை குற்றவாளிகளை திறம்பட கண்டறிந்தும், மக்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கும் எஸ்பி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT