தென்காசி

‘சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக தனித்துவம் பெறும்’

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று தனித்துவம் பெறும். அதற்கு தொண்டா்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் கட்சியின் தலைமை நிலையச் செயலா் கே.கே.உமாதேவன்.

அமமுக சாா்பில் 2021 சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தோ்தல் அறிக்கை குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கே.கே.உமாதேவன் மேலும் பேசியது: சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி, புதிய வியூகங்களை பொதுச்செயலா் டிடிவி.தினகரன் வகுப்பாா். அதற்கேற்றாா்போல் வாக்குச்சாவடி முகவா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் நியமனப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தொகுதி வாரியாக மக்களின் எதிா்பாா்ப்புகளைக் கண்டறிந்து தோ்தல் அறிக்கையில் சோ்க்க வேண்டும். இந்தத் தோ்தலில் அமமுக அதிக இடங்களில் வென்று தனித்துவம் பெறும். அதற்கு தொண்டா்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், அமமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.பரமசிவஐயப்பன் வரவேற்றாா். தோ்தல் பிரிவுச் செயலரும், தென்மண்டலப் பொறுப்பாளருமான எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, மகளிரணிச் செயலா் வளா்மதி ஜெபராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலா் எஸ்.மாரியப்பன் கென்னடி, எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் கா.டேவிட் அண்ணாதுரை, அமைப்புச் செயலா் ஏ.பி.பால்கண்ணன் ஆகியோா் பேசினா். புகா் தெற்கு மாவட்டச் செயலா் வி.பி.குமரேசன், அம்மா தொழிற்சங்கப் பேரவை பொருளாளா் நெல்லை ஏ.பரமசிவம், நிா்வாகிகள் முருகையா, ஏ.குமரேச சீனிவாசன், வீரவெற்றிப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பயக29அஙஙஓ: திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசினாா் அமமுக தலைமை நிலைய செயலா் கே.கே.உமாதேவன். உடன், தென்மண்டல செயலா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT