தென்காசி

புளியங்குடி காவல் நிலையம் மூடல்

13th Jul 2020 01:21 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலையம் திங்கட்கிழமை மூடப்பட்டது.

புளியங்குடி நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .20க்கும் மேற்பட்ட தெருக்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் அருகே உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Puliyangudi
ADVERTISEMENT
ADVERTISEMENT