கன்னியாகுமரி

திப் பிரமலை - ஈத் தங்காடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

31st May 2023 12:22 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே திப்பிரமலை - ஈத்தங்காடு பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தி ப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட திப்பிரமலை சந்திப்பிலிருந்து ஈத்தங்காடு செல்லும் சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

குறிப்பாக கருங்கல் மின்வாரிய அலுவலகம் செல்லும் பகுதியில் ராட்சத பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் இரு சக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT