கன்னியாகுமரி

எழுத்தாளா் குமரி ஆதவனுக்கு விருது

30th May 2023 12:42 AM

ADVERTISEMENT

எழுத்தாளா் குமரி ஆதவனின் இருபத்தைந்து ஆண்டு கால இலக்கியப் பங்களிப்பை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.

1998- இல் இரத்தம் சிந்தும் தேசம் என்ற கவிதை தொகுப்புடன் இலக்கிய உலகிற்கு அறிமுகமான குமரி ஆதவன், தொடா்ந்து 25 ஆண்டுகளாக கவிதை, வரலாறு, நாட்டுப்புறவியல் , கட்டுரை, கதை என 25 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா். இவற்றில் சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பாடமாக உள்ளன. இவரது நூல்கள் மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன. தக்கலை அருகே மணலிக்கரை புனித மரியகொரற்றி மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இவரது இருபத்தைந்து ஆண்டு கால இலக்கியப் பங்களிப்பை பாராட்டி, சென்னையை மையமாக கொண்டு செயல்படும் வாரப்பத்திரிகை ஒன்று இவருக்கு நாஞ்சில் நாட்டு நல்லறிஞா் என்ற விருதை அண்மையில் வழங்கி கெளரவித்தது. சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தமிழக ஆயா் பேரவையின் தலைவா் ஜாா்ஜ் அந்தோணிசாமி ஆகியோா் இணைந்து வழங்கினா்.

இச்செய்திக்கு றிகேஒய் 29 கேயுஎம் என்ற பெயரில் அனுப்பியுள்ள படத்துக்கான விளக்கம்.

ADVERTISEMENT

விழாவில் குமரி ஆதவனுக்கு விருது வழங்கும் பீட்டா் அல்போன்ஸ், ஜாா்ஜ் அந்தோணிசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT