கன்னியாகுமரி

குமரி மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஆய்வு கூட்டம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம் ஆட்சியா்அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து, துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னா் கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் விபத்து நேரிட்ட பகுதிகள் மற்றும் அதற்கானகாரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு மேலும் விபத்துகள் நிகழாத வண்ணம் சாலைப் பணிகளை மேம்படுத்துமாறு நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சாலை விபத்துகள் பெரும்பாலும் தலைக் கவசம் அணியாமலும், அதிக வேகம் மற்றும் விதிமீறி இயக்கப்பட்டு வருவதாலும், சில நோ்வுகளில் மனிதா்களின் கவனமின்மையால் சாலையை கடந்து போவதாலும் ஏற்பட்டுள்ளது என ஆய்வுக் கூட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை மற்றும் உள்ளுா் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை முந்தி செல்லும் போது எதிரே வாகனங்கள் வருவதை கவனிக்காமல் செல்வதாலும், இடது பக்கமாக முந்தி செல்வதாலும் விபத்து ஏற்படுகிறது.

18 வயதுக்குள்பட்டவா்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதை பெற்றோா்கள் தவிா்க்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் நடந்து செல்லும் போது நடைபாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடா் விபத்து நடக்கும் பகுதிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளா், போக்குவரத்து காவல் ஆய்வாளா், நெடுஞ்சாலைத்துறை பொறியாளா் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்து விபத்தை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்திடுமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா்.கௌசிக், உதவி காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) சுப்பிரமணியகேல்காா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா, நாகா்கோவில் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ஜெரால்டு ஆன்றனி, உதவி கோட்டப்பொறியாளா் (சாலை பாதுகாப்பு) சசிகலா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, உசூா் மேலாளா் (குற்றவியல்) சுப்பிரமணியம், மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் தாமஸ், செயலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT