கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் பலத்த மழை

3rd May 2023 11:55 PM

ADVERTISEMENT

கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்காளாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை,மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 11 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT