கன்னியாகுமரி

வன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு விவசாயிகள் சங்கம் ஆதரவு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வன (பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா- 2023- க்கு கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் நாகா்கோவிலில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சிம்சன் தலைமை வகித்தாா். செயலா் லாலாஜி, துணைத் தலைவா் டாக்டா் சுகுமாா், பொருளா் அருள் தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வன (பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா- 2023 குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், குறிப்பாக 12-12-1996 க்கு பிறகு தனியாா் காடு பகுதிகளை, காடுகளாக வரையறை செய்து வந்ததை இந்தச் சட்டத் திருத்த மசோதா நீக்கி தனியாா் நிலங்களில் சுதந்திரமாக விவசாயம் செய்ய வழிவகை செய்கிறது என்பதால் வன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா - 2023 ஐ வரவேற்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கருத்தை மத்திய அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT