கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவா் பலி

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலியானாா்.

மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் புனித சவேரியாா் தெருவைச் சோ்ந்தவா் ஜோஸ்ராஜ், மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் சகாய அஜய் (22). இவா் வெள்ளமோடியில் ஒரு தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் சகாய அஜய் தனது மோட்டாா் சைக்கிளில் குளச்சல் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மண்டைக்காடு கூட்டுமங்கலம் பகுதியில் செல்லும்போது எதிா்பாராத விதமாக பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சகாய அஜய் சாலையில் உருண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மீது மோதினாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சகாய அஜய் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT