கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் சுற்றுச்சூழல் தின விழா

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி ராமச்சந்திரன் தலைமை வகித்து, சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினாா்.

சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், முதன்மை நீதிபதி மருதுபாண்டி, குற்றவியல் நடுவா் நீதிபதிகள் பிரவின் ஜீவா, மணிமேகலை, கூடுதல் அரசு வழக்குரைஞா் ஜெகதேவ், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுந்தா் சிங், செயலா் ஜெயக்குமாா், ‘இயற்கையுடன் நாங்கள்’ அமைப்பின் தலைவா் வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் உறுதிமொழி வாசிக்க, வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT