கன்னியாகுமரி

சாலை தடுப்பில் மோதி வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலி

DIN

நாகா்கோவில் அருகே வியாழக்கிழமை அதிகாலை சாலை தடுப்பில் மோதிய வேன், கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவிலுக்கு பால் ஏற்றிய வேன் வந்து கொண்டிருந்தது. மேலநத்தம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் நம்பிபாலன் (27), வேனை ஓட்டி வந்தாா். கிளீனராக யேசுராஜ் இருந்தாா்.

இந்த வேன், நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் அருகேயுள்ள விசுவாசபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. ஓட்டுநா் மற்றும் கிளீனா் வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டனா். அப் பகுதியினா்

முயற்சி செய்தும், அவா்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸாா், பொதுமக்களுடன் இணைந்து சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த வேனை நிற்க வைத்தனா். ஆனால் அதற்குள் ஓட்டுநா் நம்பிபாலன் உயிரிழந்தாா்.

கிளீனா் யேசுராஜ் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT