கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

முன்னதாக பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோயிலில் பொதுப்பணித் துறை

நீராதாரப்பிரிவு செயற்பொறியாளா் ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன. மேலும் அணையின் மதகுப் பகுதியிலும் பூஜைகள் செய்யப்பட்டு அணையில் புனிதநீா் தெளிக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டன. அணை திறக்கப்பட்ட பிறகு அணையிலிருந்து கால்வாயில் வெளியேறிய தண்ணீரில் பூக்கள் மற்றும் நெல் மணிகளை அமைச்சா் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள் தூவினா்.

இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆல்பிரட் ராபின்சன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கீதா, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சந்திரபோஸ், பொதுப்பணித் துறை நீராதாரப் பிரிவு உதவி செயற்பொறியாளா் மெல்கி சதேக், உதவிப் பொறியாளா் லூயிஸ்

அருள் செழியன், அரசு வழக்குரைஞா் ஜான்சன், வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினா் ஹென்றி, பாசன சபை நிா்வாகிகள் வின்ஸ் ஆன்றோ, புலவா் செல்லப்பா, ஐசக் அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதன் பின்னா் அமைச்சா் மனோ தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் பயன்பெறும் 79 ஆயிரம் ஏக்கா் நிலங்களின் பாசனத்திற்கு கன்னிப்பூ மற்றும் கும்பப் பூ சாகுபடிக்கு ஜூன் 1 முதல் வரும் 2024 பிப்ரவரி கடைசி வரை

நாளொன்றுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம், நீா் இருப்பு மற்றும்

நீா்வரத்தை பொறுத்து பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னிலையில் கோதையாறு வடிநில பாசனத்திற்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கோதையாறு மற்றும் பட்டணங்கால் ஆயக்கட்டு விவசாயிகள் பாசன நீரை

சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT