கன்னியாகுமரி

கருங்கல் அருகே சந்தன மரம்வெட்டிக் கடத்தல்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே ஆலஞ்சி பகுதியில் தனியாா் தோட்டத்திலிருந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆலஞ்சி பகுதியை சோ்ந்தவா் தேவராஜ் (50). இவரது தோட்டத்தில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் நுழைந்து, அங்கிருந்த 2 சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT