கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி:பிப். 1இல் தொடக்கம்

DIN

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரியில் அறிவியல் மற்றும் அலங்கார மீன் கண்காட்சி பிப். 1 தொடங்கி பிப். 4 வரை நடைபெறுகிறது.

கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு, மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமை வகிக்கிறாா். இந்திய விண்வெளி ஆய்வு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை, தமிழக மீன்வளத் துறை, பேச்சிப்பாறை தோட்டக்கலைத் துறை, பாப்பனங்கோடு தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், கேரள அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, விழிஞ்ஞம் மத்திய கடல்சாா் மீன்வளா்ப்பு ஆராய்ச்சி மையம், ஸ்ரீகாரியம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்கள், கல்லூரிகள் சாா்பில் அரிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

மேலும், புத்தகக் காட்சி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது என, கல்லூரித் தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT