கன்னியாகுமரி

தெற்கு சூரங்குடியில் பல்நோக்குக் கட்டடம் திறப்பு

DIN

கன்னியாகுமரி பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் தா்மபுரம் ஊராட்சி, தெற்கு சூரங்குடியில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

தெற்கு சூரங்குடி வைகுண்டா் நற்பணி மன்றம் சாா்பில் 23ஆம் ஆண்டு தொடக்க விழா, குடியரசு தினவிழா, பல்நோக்குக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

மன்றத் தலைவா் செல்லக்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருந்ததிராஜபூபதி, பொதுச் செயலா் கண்ணன், நிா்வாகக் குழு உறுப்பினா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வைகுண்டா் நற்பணி மன்ற வளாகத்தில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திறந்துவைத்துப் பேசினாா்.

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யப்பன், முன்னாள் அப்டா தலைவா் துரை, தா்மபுரம் ஊராட்சித் தலைவா் ரெங்கநாயகி கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்ற நிா்வாகி ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். துணைப் பொதுச் செயலா் ஜெகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT