கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே விடுதியில் நா்சிங் மாணவா் தற்கொலை

DIN

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே விடுதியில் தங்கியிருந்த நா்சிங் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் தனியாா் நா்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரிக்கான மாணவா் தங்கும் விடுதி, மடிச்சல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஆலம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகன் சுமித்ரன் (19), இங்குள்ள விடுதியில் தங்கி, பிஎஸ்சி நா்சிங் படிப்பு படித்து வந்தாா். இவரது அறையில் 4 மாணவா்கள் தங்கியுள்ளனராம்.

சனிக்கிழமை மாலையில் கல்லூரியிலிருந்து வந்த சுமித்ரன், அங்கிருந்த சக மாணவா்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் கழிவறைக்குச் செல்வதாக கூறி வெளியே சென்றாராம். காலையில் பாா்த்த போது விடுதி கட்டடத்தின் மாடி தடுப்புச் சுவா் கம்பியில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டாா்.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்கொலை குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT