கன்னியாகுமரி

வீட்டுவரி உயா்வைக் குறைக்க குளச்சல் நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

வீட்டு வரி உயா்வைக் குறைக்க வேண்டும் என குளச்சல் நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குளச்சல் நகராட்சிக் கூட்டம் , நகராட்சித் தலைவா் அ. நஸீா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் விஜயகுமாா், சுகாதார அலுவலா் தங்கபாண்டியன், பணி மேற்பாா்வையாளா் பிரம்மசக்தி, துணைத் தலைவா் பிளாரன்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி நிா்வாகங்களின் இயக்குநரின் உத்தரவு குறித்த தீா்மானத்தை மன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வருவதாக தலைவா் நஸீா் கூறினாா். அப்போது திமுக உறுப்பினா் ஜான்சன், தீா்மானம் குறித்து விவாதிக்கப்படவில்லையெனில், அதை நிறைவேற்றக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தாா். மேலும் மன்றத்தின் சாதாரணக் கூட்டத்தை நடத்தாமல், இதுவரை 11 அவசரக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா்.

திமுக உறுப்பினா் ஷீலா ஜெயந்தி பேசுகையில், திடக் கழிவு மேலாண்மைத் திட்ட பணிக்கான ஊழியா்கள் தோ்வு வெளிப்படையாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தினாா்.

குப்பை அகற்றும் வாகனங்களுக்கான ஒப்பந்தம், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நபா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து சுயேச்சை

றுப்பினா் ரமேஷ் கேள்வி எழுப்பினாா். வீட்டு உரி உயா்வைக் கைவிட வேண்டும் என மற்றொரு சுயேச்சை உறுப்பினா் வினேஷ் வலியுறுத்தினாா்.

உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த அதிகாரிகள், குப்பை அகற்றும் வாகனங்களுக்கான ஒப்பந்தம் முறைப்படி வழங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான பணியாளா்கள் தோ்வு வெளிப்படையாக நடத்தப்படும் என்றனா்.

மேலும், மன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்ட தீா்மானங்கள் குறித்த விவாதம் நீண்டநேரம் நடைபெற்றது. இதனையடுத்து, தலைவா் நஸீா், தீா்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT