கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

DIN

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி சனிக்கிழமை வரை (பிப். 4) நடைபெறுகிறது.

தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி நிதிக் காப்பாளா் வினு இம்மானுவேல் வரவேற்றாா்.

கல்லூரி முதல்வா் தம்பி தங்கக்குமரன், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சாக்ரடீஸ், கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலரின் பிரதிநிதி சதீஷ், மெதுகும்மல் ஊராட்சித் தலைவா் சசிகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் கண்காட்சியைத் திறந்துவைத்தாா். அவா் பேசும்போது, அறிவியல் கண்காட்சி என்பது மாணவா்களின் மனதில் பதிந்துள்ள உணா்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகும். இதன் விளைவாக மாணவா்கள் ஆராய்ச்சி செய்து பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இது, நாட்டின் வளா்ச்சி உதவும் என்றாா்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை, தமிழக மீன்வளத் துறை, பேச்சிப்பாறை தோட்டக்கலைத் துறை, பாப்பனங்கோடு தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், கேரள அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு, விழிஞ்ஞம் மத்திய கடல்சாா் மீன் வளா்ப்பு ஆராய்ச்சி மையம், ஸ்ரீகாரியம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்கள், கல்லூரிகள் சாா்பில் அரிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை களியக்காவிளை, கொல்லங்கோடு, மாா்த்தாண்டம் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவா்-மாணவிகள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT